முருங்கைக்காய் சாறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைக்க:

முருங்கைக்காய் - 2

வெங்காயம் - 3

தக்காளி - 2

புளி - ஒரு லெமென் சைஸ்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கோதுமை மாவு - மூன்று தேக்கரண்டி (கரைத்து ஊற்றவும்)

தாளிக்க:

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

பூண்டு - மூன்று பல் (தட்டிக்கொள்ளவும்)

கறிவேப்பிலை - ஐந்து கொத்து

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

முருங்கைக்காயில் வேக வைக்க வேண்டியவைகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். அதில் புளியை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றவும்.

வெந்ததும் கோதுமை மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து முருங்கைக்காய் சாறு ஊற்றி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: