முருங்கைகாய் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

முருங்கைகாய் - 1

புளி - ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 கரண்டி

மல்லி - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி

தக்காளி - 1

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முருங்கைக்காயை நறுக்கவும். துவரம்பருப்பில், மஞ்சள்பொடி, 2 கப் தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேக விடவும்.

மிளகு, சீரகம், மல்லி, பூண்டு தட்டி வைக்கவும்.

4 முருங்கைக்காய் துண்டுகளை சதையை மட்டும் வழித்து பருப்பு தண்ணீரில் சேர்க்கவும். தக்காளியை புளியுடன் சேர்த்து கரைக்கவும்.

வாணலியில் கடுகு, வரமிளகாய், தேங்காய் துருவல் தாளிக்கவும். கரைத்த புளி, தக்காளியை ஊற்றவும். 5 நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடியை சேர்க்கவும்.

5 நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் மீதி முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை மல்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: