மிளகு ரசம் (2)
தேவையான பொருட்கள்:
மிளகு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
மல்லிவிதை - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், துவரம் பருப்பு, மல்லி விதை, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு மேசைக்கரண்டி உப்பு மற்றும் அரைத்தவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொள்ளவும்.
நன்றாக கொதி வந்தவுடன் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்.