மிளகு ரசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு

துவரம்பருப்பு - 3 தேக்கரண்டி

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை 1/2 லிட்டரில் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.

புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல் தனிதனியாக வறுக்கவும்.

பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்ததை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேர்த்து, பொங்கி வரும் சமயம் இறக்கவும். மீதியுள்ள நெய்யில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: