மாம்பழ ரசம்
தேவையான பொருட்கள்:
நறுக்கின மாம்பழம் - ஒரு கிண்ணம்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி + 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி அரைப்பதற்கு ஏற்றாற்போல் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மிளகு, சீரகம் இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை தனியே எடுத்து வைக்கவும்.
புளிக்கரைசலுடன் பொடி செய்த மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மாம்பழக் கூழ், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கலவையை ஊற்றவும்.
பிறகு 3 நிமிடம் கொதிக்க விட்டு நுரைத்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.