மாங்காய் ரசம்
தேவையான பொருட்கள்:
மாங்காய் - பாதி
பச்சை மிளகாய் - 2
மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
சீரகம் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்
மிளகு - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வரமிளகாய் - 1
செய்முறை:
ஒரு சிறிய குக்கரில் மாங்காய், மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
பூண்டு, சீரகம், மிளகு மற்றும் பாதி அளவு மல்லித் தழை சேர்த்து சிறிய உரலில் போட்டு இடித்து வைக்கவும். (அல்லது மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்).
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, பெருங்காயத் தூள் போட்டு இடித்தவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள மாங்காய் கரைசலைச் சேர்த்து, உப்பு போட்டு தேவையான அளவு சுடுநீர் ஊற்றவும்.
அனைத்தும் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.