மங்களூர் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 3

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

தேங்காய் - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

புளி - 4 தேக்கரண்டி விழுது

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பருப்புகள், மிளகு, மிளகாய் வற்றல், சீரகம், வெந்தயம் இவற்றை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

வறுத்து எடுத்தவற்றுடன் புளி, தேங்காய் மற்றும் ஒரு தக்காளி சேர்த்து அரைக்கவும்.

மீதித் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைத்த விழுதையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு திட்டமாக தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

கரைத்தவற்றை பிரஷர் பானில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.

பிறகு கொத்தமல்லி தழையை போட்டு நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த ரசம் மைசூர் ரசம் போல் சற்று கெட்டியாக இருக்கும்.