பைனாப்பிள் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள் - 2 1/2 கப்

தக்காளி - 2 சின்னது

மிளகாய் வற்றல் - 2

ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

வெல்லம் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

1 1/2 தக்காளியை மிக்சியில் அடிக்கவும்.

ஒரு கப் பைனாப்பிளை அடித்து வடிகட்டி ஜூஸ் எடுத்து வைக்கவும்.

1 1/2 கப் பொடியாக நறுக்கிய பைனாப்பிளை தயாராக வைக்கவும்.

பருப்பை வேக வைத்து நீரோடு மசித்து வைக்கவும்.

நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளுடன் 3 கப் நீர் விட்டு வெல்லம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.

பாதி வெந்த பைனாப்பிளுடன் தக்காளியை ஊற்றி கொதிக்க விடவும். தக்காளி வாசம் அடங்கியதும் அடுப்பில் இருந்து எடுத்து பைனாப்பிள் சாறு ஊற்றி வைக்கவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் பெருங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் பொடியாக நறுக்கிய மீதி பாதி தக்காளியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உடனே ரசப்பொடியும் சேர்த்து பிரட்டி விடவும்.

ரசப்பொடி சேர்த்து நீண்ட நேரம் வதக்க கூடாது. பிரட்டிய உடனே பருப்பு மசித்ததை ஒரு கப் நீரோடு சேர்க்கவும்.

இதில் தக்காளி பைனாப்பிள் கலவையை ஊற்றி உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடன் சாப்பிடவோ, சூப்பாக குடிக்கவோ அருமையாக இருக்கும்.