பூண்டு ரசம் (2)





தேவையான பொருட்கள்:
பூண்டு - 7 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
நெய் - சிறிது தாளிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
கொதித்து பூண்டு வாடை போனதும் இறக்கி கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறவும்.