பூண்டு ரசம்
0
தேவையான பொருட்கள்:
புளி - கோலி அளவு
தக்காளி - 1
வேக வைத்த துவரம் பருப்பு - 1 கரண்டி
நசுக்கிய பூண்டு - 6 பல்
ரசம் பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
செய்முறை:
புளியுடன் பருப்பு, தக்காளி, ரசப் பொடி, உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு கலந்து வைத்துள்ள புளி நீரைச் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.