பூண்டு பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பல் (தட்டியது)
துவரம் பருப்பு - ஒரு கை
தக்காளி - 2
வெங்காயம் - 1
மிளகு பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துறுவல் - சிறிதளவு
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
வறுத்து பொடி செய்ய:
மல்லி - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
பூண்டு - 10 பல்
வரமிளகாய் - 1
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
புளியை வெண்ணீரில் ஊறவைக்கவும்.துவரம் பருப்பை குழைய வேகவைக்கவும்.
சிறிது எண்ணெயில் மல்லியை தவிர வறுத்து பொடிசெய்ய கொடுத்தவற்றை வறுத்து கடைசியில் மல்லியை அந்த சூட்டிலெயே வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.
புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை,பூடு இவற்றை லேசாக அம்மியில் தட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் அம்மியில் தட்டியவற்றை சேர்த்து கிளறவும். அதன் பின் எல்லா தூளையும் சேர்க்கவும்.
இப்போது தக்காளி சேர்த்து வதக்கிவிடவும். நன்கு குழைந்ததும் வறுத்த பொடித்தவற்றை சேர்த்து வதக்கவும்.
அதன்பின் புளிகரைத்த நீரில் வேகவைத்த பருப்பையும் கரைத்து அதில் சேர்க்கவும்.
நுரைத்து வரும் போது தேங்காய் துறுவல் தூவி உடனே இறக்கி பரிமாறவும்.