புளியாணம்
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 1
சிறிய (சாம்பார்) வெங்காயம் - 2
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த்துண்டு - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊறவைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
புளி கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்
உரலில் சீரகம், சோம்பு,மிளகு போட்டு இடித்து தூளக்கி புளி கரைசலில் போடவும்
அதே உரலில் வெங்காயம், பச்சை மிளகாய், வத்தல், தேங்காய் துண்டு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு தட்டி புளி கரைசலில் சேர்க்கவும்
இந்த கரைசலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போடவும்.
தக்காளியை பிழிந்து விடவும்.
நன்றாக கலக்கவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, க.பிலை போது தாளிக்கவும்
பிறகு புளி கரைசலை ஊற்றி சூடு பண்னவும். கொதி வரும் முன்பு இறக்கி பரிமாறவும்.