புதினா ரசம்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி
தக்காளி - 100 கிராம்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
மிளகு - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
வத்தல் - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
புதினா - சிறிய கட்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். இந்த பருப்புடன் தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
புளியை தனியாக கரைத்துக்கொள்ளவும்.
மிளகு, கொத்தமல்லி, 1/2 தேக்கரண்டி சீரகம்,வத்தல் இவற்றை வறுத்து தூளாக்கவும்.
புதினா இலையை நன்கு கழுவி சுத்தமாக்கி கட்பண்ணி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,1/2 தேக்கரண்டி சீரகம்,பெருங்காயம் போட்டு தாளித்து பருப்பு தக்காளி கலவையை ஊற்றி தூளாக்கிய பொடி, புளிகரைசலை ஊற்றி புதினா,உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி பரிமாறவும்.