பீட்ரூட் ரசம் (1)
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
ரசம் பொடி - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத் தூள் - சிட்டிகை
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பீட்ரூட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
பிறகு பீட்ரூட் தண்ணீரில் ரசம் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, பூண்டு, சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை போட்டு அதில் பீட்ரூட் கலவையை ஊற்றவும்.
கொதி வந்ததும் கொத்தமல்லி மற்றும் பெருங்காயம் போட்டு இறக்கி பரிமாறவும்.