பாசிப்பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1
புளி - கொட்டைப்பக்களவு
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - சிறுத்துண்டு
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைக்கவும்
புளியை கரைத்து வடிக்கட்டவும்
தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்
புளி நீரில் எல்லா தூள்களையும் போட்டு பூண்டையும் நசுக்கி போடவும்.தக்காளித்துண்டுகளை அதில் பிசைந்துவிடவும்.
அதில் வெந்தபருப்பை மசித்து ஊற்றவும்.தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்க்கவும்
வாணலியில் நெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து கரைத்த ரசத்தை ஊற்றி நன்றாக நுரைக்க கொதிக்கவிடவும்
பின் கொத்தமல்லி தழைதூவி இறக்கி பரிமாறவும்