பருப்பு ரசம் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு தண்ணீர் - ஒரு கிளாஸ்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

புளி - கோலிக்குண்டு அளவு

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 1

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, மல்லி இலை, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை அரைத்து, புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து அரைத்ததை ஊற்றி கலக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் போட்டு தாளித்து புளித்தண்ணீரை ஊற்றி நுரை சேர்ந்து வரும் போது பருப்பு தண்ணீரை ஊற்றி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: