பருப்பு ரசம் (3)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
புளி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளியை கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி பொடியாக நறுக்கி போடவும், பச்சை மிளகாய் கீறி போடவும், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சியை நசுக்கி போடவும், கொத்தமல்லி, உப்பு சேர்த்து.
கரைத்த புளியுடன் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இதற்க்கிடையே துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
பருப்பு நன்கு வெந்ததும், பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் விடவும்.
மறுபடியும் ஒரு கொதி வந்ததும் ஆப் பண்ணவும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி பரிமாறவும்.