பருப்பு ரசம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

புளி - சிறு எலுமிச்சை அளவு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

பூண்டு - 4

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளி கரைத்து வைக்கவும்.

தக்காளியை மசித்து வைக்கவும்.இதனுடன் பச்சை மிளகாய் கிறி போடவும்.மிளகாய் தூள்,தனியா தூள் போடவும்.

வெந்த பருப்பையும் தண்ணீரையும் அதில் சேர்க்கவும்.புளியை ஊற்றி உப்பு சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கறிவேப்பிலை போட்டு கலக்கி வைத்துள்ள கலவையை ஊற்றவும்.

ஒரு பாத்திரத்தில் மிளகு, சீரகம் பொடி செய்து போடவும்.பூண்டு நசுக்கி போடவும்.கொத்தமல்லி சேர்க்கவும்.

கடாயில் உள்ள கலவை நுரை கட்டியவுடன் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி உடனே மூடவும். பின்பு பரிமாறவும்.

குறிப்புகள்: