பருப்பு ரசம் (1)
தேவையான பொருட்கள்:
மிளகு - 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 50 கிராம்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி - 3
கறிவேப்பிலை - 4 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த பருப்பை பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி, மஞ்சள் தூள் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
மிளகு, சீரகம் இரண்டையும் பொடி செய்துக் கொள்ளவும். புளியுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து கொதித்து பொங்கி வரும் போது மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் மிளகு, சீரக தூள், உப்பு போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும்.
5 நிமிடம் கழித்து புளிக்கரைசலை ஊற்றி கொதித்து பொங்கி வரும் போது இறக்கி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு கடுகு தாளித்து ரசத்தில் ஊற்றி பரிமாறவும்.