பயத்தம் பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - ஒரு கரண்டி
புளி - எலுமிச்சங்காய் அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து அரைக்கவும்.
தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து அதனுடன் பருப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் அரைத்த கலவைகளைப் போட்டு உப்பு சேர்த்து கரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு வெடித்ததும் ரசக் கலவையை ஊற்றிக் கொதித்தபின் இறக்கி பரிமாறவும்.