பன்னீர் ரசம்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 150 கிராம்
புளி - 10 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - சிறிது
பன்னீர் - 1/4 பாட்டில்
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.
புளி, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீரை விட்டு ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை விட்டு அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சூடானதும் பருப்பையும், மஞ்சள்பொடியையும் போடவும்.
பருப்பு வெந்ததும் மத்தால் நன்றாக மசித்து விட்டு புளியைக் கரைத்து விட்டு பின்பு பொடியைப் போடவும்.
நன்றாக கொதித்ததும் நூறு மில்லி தண்ணீர் விட்டு சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். கடுகைத் தாளிக்கவும்.
இறுதியில் பன்னீரை விட்டு மூடியால் மூடி வைத்து பின்பு பரிமாறவும்.