பச்சை மிளகாய் ரசம்
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 10
பூண்டு - 4 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தண்டு - கைப்பிடி அளவில் பாதி
கறிவேப்பிலைத் தண்டு (சிறிய குச்சிகள்) - கைப்பிடி அளவில் பாதி
தக்காளி - 2
எலுமிச்சை பழம் - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - கைப்பிடி அளவில் பாதி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலைத் தண்டுகளை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கி வைக்கவும்.
நறுக்கிய தண்டுகளுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
30 நிமிடங்கள் கழித்து நுரைத்து கொதிக்க துவங்கியதும் உப்புச் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். அத்துடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிடுவதால் அதிகக் காரமாக இருக்காது.