தேங்காய் பால் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

புளி - எலுமிச்சை அளவு

தேங்காய் - அரை மூடி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கறி மசாலா தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

வடகம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் புளி தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை பிழிந்து பால் எடுக்கவும்.

புளித் தண்ணீருடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு பிசைந்து கலக்கவும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், கறி மசாலா தூள் உப்பு சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம், மிளகாய் தூள், சீரக தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றை ரசத்தில் போட்டு, கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது.

கறி குழம்புடன் இதனை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.