தேங்காய்பால் ரசம் (1)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய்பால் - 1/2 மூடி
தக்காளி - 2
புளி கரைசல் - 1/4 டம்ளர்
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்கு:
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
வத்தல் - 1
செய்முறை:
தேங்காயை துருவி 2டம்ளர் பால் எடுத்து வைக்கவும்.
பாலுடன் தக்காளியை பிசைந்து விடவும்.
இதனுடன் புளி கரைசல், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்த்தூள் சோம்புத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
சட்டியில் கொஞ்சம் எண்ணெய் காய்ந்த பின்பு கடுகு கறிவேப்பிலை வத்தல் போட்டு தளிக்கவும்.
பிறகு தேங்காய்பால் ரசதினை ஊற்றவும். மிதமான சூடனதும் இறக்கவும். மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்