திப்பிலி ரசம்
0
தேவையான பொருட்கள்:
கண்டந்திப்பிலி - 4 குச்சி
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி காயவைத்து கண்டந்திப்பிலி, மிளகாய், மிளகு, பெருங்காயம், துவரம் பருப்பு இவற்றை வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
இறுதியில் இறக்கும் போது சீரகத்தைப் போட்டு ஒரு தடவை வறுத்து எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அரைத்த விழுதையும் போட்டு நன்கு கொதிக்கவிட்டு கடுகு தாளித்து இறக்கி பரிமாறவும்.