திப்பிலி ரசப்பொடியும் திப்பிலி ரசமும்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கண்டந்திப்பிலி - 3 சுண்டு விரல் அளவு

தனியா - 3 தேக்கரண்டி

சீரகம் - 3 தேக்கரண்டி

மிளகு - 3 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 7

தக்காளி - 2

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் லேசாக வறுத்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

இந்த ரசத்தைத் தக்காளியும் பருப்பு நீருமும் விடாமல் பத்திய ரசமாகவும் செய்யலாம்.

அவற்றைச் சேர்த்து செய்தாலும் ருசியாக இருக்கும்.

ஒரு லிட்டர் ரசம் பண்ண எலுமிச்சை அளவு புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

தக்காளியை நறுக்கிப் போடவும். உப்பு, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, மேற்கண்ட பொடியில் தேவையான அளவு போட்டு பருப்புத் தண்ணீர் விட்டு ஒரு லிட்டர் அளவு ஆக்கிக் கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பிரஷர் குக்கருக்குள் வைத்து ஒரு விசில் வந்ததும் அணைத்து விடவும்.

சிறிது நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: