திடீர் ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
லேசாக மிக்ஸியில் திரிக்க:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
சிவப்பு பச்சைமிளகாய் (அல்லது) காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
தாளிக்க:
ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஐந்து கொத்து
வெந்தயம் - 3
பெருங்காயத்தூள் - ஒரு பின்ச்
நெய் - ஒரு டிராப்
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து வைக்கவும்.
திரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
இப்போது தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்ததை போட்டு இரண்டு மூன்று நிமிடம் நன்கு வதக்கவும். கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கலக்கி தீயை மிதமாக வைக்க வேண்டும்.
ரசம் கொதிக்க கூடாது நான்கு பக்கமும் நுரை பொங்க ஆரம்பிக்கும் போது அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு ஒரு சொட்டு நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.