தக்காளி ரசம் (8)





தேவையான பொருட்கள்:
கையால் நன்கு பிசைந்த தக்காளி - 1 கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
சாம்பார்ப்பொடி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரிந்த கொத்தமல்லி இலை - ஒரு கை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காய பொடி - 1 தேக்கரண்டி
வெந்த பருப்பு - 1 மேசைக்கரண்டி
மிளகு சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை ஊறவைத்து கெட்டியான சாறு எடுக்கவும்.
அத்துடன் 5 கப் நீர் சேர்க்கவும்.
தக்காளி, காயம், சாம்பார் பொடி, இலைகள், மஞ்சள் தூள், உப்பு, அனைத்தும் அத்துடன் சேர்க்கவும்.
வாணலியில் அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகம் போட்டு அது வெடிக்கும்போது கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.
ரசம் நன்கு கொதித்து வரும்போது பருப்பு, மிளகு-சீரகப்பொடி சேர்க்கவும்.
ரசம் மறுபடியும் நுரைத்து வரும்போது இறக்கி பரிமாறவும்.