தக்காளி ரசம் (7)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி பழம் - 3
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
உப்பு - தேவையானவை
செய்முறை:
தக்காளி பழத்தில் தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பாத்திரத்தை மூடி வைத்தால் தக்காளி எளிதில் வெந்துடும். இதற்கிடையே துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி வெந்த பிறகு இரண்டு கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி போட்டு ஒரு கொதி விடவும்.
பருப்பு நன்கு வெந்ததும், பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் விடவும்.
மறுபடியும் ஒரு கொதி வந்ததும், சிறிது நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு இறக்கி பரிமாறவும்.