தக்காளி ரசம் (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - இரண்டு

புளி - எலுமிச்சையளவு

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

புளியை நான்கு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி, தக்காளியுடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் மசித்துக் கொள்ளவும்.

மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனை புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவிவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: