தக்காளி ரசம் (2)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மிளகு சீரக பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தக்காளி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து அதில் புளி சேர்க்கவும். பிறகு தக்காளி தோலை எடுத்து விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். அதில் பெருங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் தக்காளி புளி கரைத்த தண்ணீரை சேர்க்கவும். அதனுடன் மிளகு சீரக பொடி சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை சூப் போலவும் குடிக்கலாம்.