தக்காளி ரசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 5

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - 4 இலைகள்

முழுபூண்டு - ஒன்று

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காய தூள் - சிறிதளவு

செய்முறை:

தக்காளியில் நீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு சுற்று மட்டும் மிக்ஸியில் அடித்து தனியாக எடுத்து வைக்கவும்

அதன் பின் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து விழுதை தனியாக வைக்கவும்

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமானதும் ஒன்றிரண்டாய் அரைத்த பச்சைமசாலாவை சேர்த்து வாசம் போக வதக்கவும்.

அதன் பின்னர் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.

வாசம் போனதும் தக்காளி விழுதையும் தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

நுரை பொங்கி வரும் பக்குவத்தில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.

பின் மீண்டும் நுரை பொங்கி வரும் பக்குவத்தில் கீழே இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: