தக்காளி ரசம் (ஈஸியான முறை)
தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி - 3
புளி - 3 மேசைக்கரண்டி
ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2 லேசாக தட்டியது
கறிவேப்பிலை - மூன்று ஆர்க்
பெருங்காயம் - ஒரு பின்ச்
கொத்தமல்லி - சிறிது மேலே தூவ
செய்முறை:
தக்காளியை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் விடவும்.
வெந்த தக்காளி ஆறியதும் ஒரு சட்டியின் மேல் பெரிய அகலமான கண் வடிகட்டியை வைத்து வடிகட்டவும். கையால் நன்கு பிசைந்து விட வேண்டும். வேண்டுமென்றால் கூட கால் டம்ளர் தண்ணீர் விட்டு பிசைந்து அந்த ஜூஸையும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இப்போது தக்காளி ஜூஸில் உப்பு, புளி தண்ணீர், ரச பொடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியில் சட்டியை காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு பூண்டு சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தக்காளி ரசத்தில் கலக்கவும்.
கொத்தமல்லி தூவி நெய் ஊற்றி இறக்கி பரிமாறவும்.