தக்காளி பருப்பு சாறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - கால் கிலோ

பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 5

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - ஒரு சிட்டிகை

ஏலக்காய் - ஒன்று

வெண்ணெய் - அரை தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - ஒன்று

பூண்டு - ஒன்று

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.

தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் தண்ணீர் விட்டு நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகத்தூள் சேர்த்து குழைய வேக விடவும்.

பிறகு வெந்தவுடன் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

வேறோரு கடாயில் வெண்ணெய் போட்டு சீரகதூள், சோம்புதூள், வெங்காயம் சேர்த்து வதக்கி அதை தக்காளி, பருப்பு சாறில் சேர்க்கவும்.

இறக்கியவுடன் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

குறிப்புகள்: