சிம்பிள் ரசம்
0
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
பூண்டு - 3 பல்,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
எண்ணெயில் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி வதக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.