கோழிச்சாறு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழிக் குஞ்சு - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 8 பல்

தக்காளி - 1

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

தனியா - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து, நசுக்கி, சிறிய துண்டுகளாக பிய்த்து போடவும்.

வெறும் வாணலியில் மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து, நைசாக பொடிக்கவும்.

அத்துடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, கோழியை அதில் போட்டு வதக்கவும்.

வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சின்ன கோழி கிடைக்க வில்லையென்றால் கோழி கறியையே சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்