கொள்ளு ரசம் (7)
0
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 100 கிராம்
எலுமிச்சைச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
ரசப்பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பழுத்த தக்காளி - ஒன்று
கடுகு - ஒரு ஸ்பூன்
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
கொள்ளு பயரை கழுவி சுமார் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்கவும்.
வெந்தவுடன் ஆறவிட்டு அதன் தண்ணீரையே ஊற்றி ஜூஸ் மிக்ஸில் அரைத்துக்கொள்ளவும்.
தக்காளிப்பழத்தை நன்கு பிசைந்து, அத்துடன் ரசப்பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளவும். அரைத்த கொள்ளு தண்ணீரை அத்துடன் கலந்துவைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைப் போட்டு வெடிக்கவிட்டு, நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கலக்கி வைத்துள்ள ரசத்தை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.