கொள்ளு ரசம் (6)
0
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 3,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
புளி - எழுமிச்சம் பழ அளவு,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்துமல்லி - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:
கொள்ளை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
புளி, தக்காளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
ஊற வைத்த கொள்ளுடன் சீரகம், தனியா, வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் புளியோடு சேர்க்கவும்.
நுரைத்து வரும் போது இறக்கி எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொத்தமல்லி தூவவும்.