கொள்ளு ரசம் (2)
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு - 3 மேஜைக்கரண்டி
2. தக்காளி - 1
3. பூண்டு - 5 பல்
4. ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
5. கொத்தமல்லி, கறிவேப்பிலை
6. உப்பு, மஞ்சள் தூள்
தாளிக்க:
7. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
8. கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு
9. பெருங்காயம்
10. மிளகாய் வற்றல் - 2
செய்முறை:
குக்கரில் கொள்ளுடன் 3 கப் நீர் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
நீரை வடித்து எடுத்து கொண்டு கொள்ளை மத்து கொண்டு மசிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பிரட்டவும். (லேசாக பிரட்டினால் போதும் வதக்க தேவை இல்லை.)
இத்துடன் மஞ்சள் தூள் மற்றும் ரசப்பொடி சேர்த்து சூடான எண்ணெயில் ஒரு முறை பிரட்டி உடனே கொள்ளு வேக வைத்த நீரை சேர்க்கவும்.
இத்துடன் மசித்த கொள்ளு சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கொதி கொதித்ததும் எடுக்கவும்.