கொள்ளு ரசம் (1)
தேவையான பொருட்கள்:
கொள்ளு பருப்பு - ஒரு கரண்டி
தக்காளி - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
பூண்டு - 5 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
வரமிளகாய் - ஒன்று
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் வைக்கவும். தக்காளியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கொள்ளு பருப்பு குறிப்பிற்கான லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/28060
மிக்ஸியில் பூண்டு, சீரகம், மிளகு மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு அரைத்துக் கொள்ளவும். (நைசாக அரைக்க வேண்டாம்). வேக வைத்த தக்காளியை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளிக்கவும்.
அத்துடன் தக்காளிக் கரைசலை ஊற்றி, பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
பிறகு கொள்ளு பருப்பு மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, நன்கு நுரைத்து வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
சூடான சுவையான கொள்ளு ரசம் தயார். இது சளிக்கு மிகவும் நல்லது.