குவிக் ரசம்
0
தேவையான பொருட்கள்:
புளி தண்ணீ ஐஸ் கியுப் - 4
அரைக்க:
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - 2 ஆர்க்
வெந்தய பொடி - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1 பின்ச்
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றும் பாதியுமாக அரைத்து வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, அரைத்த விழுதை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, புளி தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு மேலும் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நுரைத்ததும் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்