கிட்ஸ் க்ரீன் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு தண்ணீர் -1 கப்

புளிப்பான பச்சை திராட்சை - 1/2 கப்

ரசப்பொடி - 2 தேக்கரண்டி

நறுக்கிய தக்காளி - சிறிது (விருப்பப்பட்டால்)

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - 1 கீற்று

காய்ந்த மிளகாய் - 1

நெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

திராட்சையை ஜூஸரில் போட்டு அடித்து வடிகட்டி ஒரு கப் எடுக்கவும்

அதோடு துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு கப் சேர்க்கவும்.

ரசப்பொடி, உப்பு சேர்த்து கலக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

கொத்தமல்லிதழையை நறுக்கி சேர்க்கவும்.

வாணலியில் நெய் விட்டு கடுகு ,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து.

திராட்சை ரசத்தை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: