கறி ரசம்
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி வேகவைத்த தண்ணீர் - 3 கப்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பட்டை வத்தல் (அடுப்பில் சுட்டது) - 2
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 8 அல்லது 10 பல்
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
அரைக்க கொடுத்த பொருளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து அதில் கறி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அதில் பிசைந்து விட்டு போடவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து அரைத்த மசாலாவை போட்டு வதக்கி பின் புளித்தண்ணீர் கரைசலை தாளித்த கலவையில் ஊற்றி நுரை கட்டி வரவும் அடுப்பை அணைத்து விடவும்.
கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.