எலுமிச்சை பழ ரசம்





தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 டம்ளர்
பெரிய தக்காளி - 1
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு பின்ச்
எலுமிச்சை - ஒரு பழம்
கொத்தமல்லி - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பொடித்து தூவ:
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தனியா - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பருப்பை குழைய வேக வைக்க வேண்டும்.
தக்காளியை நன்கு பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்து தக்காளி வெந்ததும் பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு மிளகு, சீரகம், தனியாவை பொடித்து சேர்க்க வேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சை பழ சாறை பிழிந்து பரிமாறவும்.