எலுமிச்சம் பழ ரசம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலுமிச்சம் பழம் - 2

ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி

பருப்பு - 1/4 கப்

பெருங்காயம் - ஒரு துண்டு

பச்சைமிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சம் பழங்களை நறுக்கி சாறு பிழியவும்.

வேக வைத்த பருப்புடன் ரசப்பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கி, எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

அதில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு பச்சைமிளகாயை கீறிப்போட்டு லேசாக வதங்கியதும் இறக்கி ரசத்தில் கலந்து கொண்டு பரிமாறவும்.

குறிப்புகள்: