எலுமிச்சம் பழ ரசம் (1)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி பழம் - 2
எலுமிச்சம் பழம் - 1
கொத்தமல்லி இலை - சிறிது
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, வற்றல், தாளித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளிப் பழத்தை போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி சக்கையாக பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு இவற்றை தட்டிப் போட்டு கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு கலக்கி தாளித்து, கடுகையும், மிளகாயையும் போட்டு இறக்கவும்.
பின்பு தேவையான அளவு புளிப்புக்கு எலுமிச்சம் பழம் பிழிந்து விட்டு உப்பு சேர்த்து பரிமாறவும்.