ஈஸி ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டொமேட்டோ பேஸ்ட் - 1 தேக்கரண்டி

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

தண்ணீர் (தக்காளி பேஸ்ட், ரசப்பொடியுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும்) - 1 கப்

பூண்டு - 3 பல்

சின்ன வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 10 இலை

பொடியாக நறுக்கிய மல்லி இலை - 4 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிக்ஸியில் பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மூன்று இலை போட்டு, உப்பு சேர்த்து கரைத்து வைத்த ரசத்தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

பூண்டும், கறிவேப்பிலையும் மையாக அரையாது ஒன்றிரண்டாக இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ரசக்கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் தீயை அணைத்து விட்டு மல்லி இலை தூவி கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: