இஞ்சி ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

ரசப் பொடி - 1 தேக்கரண்டி

மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

புளி - தேவைக்கேற்ப

பெரிய தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு, சீரகம், பெருங்காயம் - தலா 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - வாசனைக்கேற்ப

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மிளகு, சீரகத்தைப் பொடி செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி விட்டு விழுதாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றினை மேலாக வடித்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.

ஒரு பாத்திரத்தில் புளி, வேக வைத்த பருப்பு, தக்காளி, உப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதி வருமுன் ரசப் பொடி போட்டு கொதிக்க வைக்கவும்.

நுரைத்து வந்தவுடன் கொத்தமல்லித் தழை மற்றும் இஞ்சி சாற்றை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

ரசப் பொடி செய்முறைக்கான லின்க்: