ஆப்பிள் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு தண்ணீர் - 2 கப்

ஆப்பிள் - 1

தக்காளி - 2

தேசிக்காய்சாறு (எலுமிச்சைச்சாறு) - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையானளவு

செய்முறை:

ஆப்பிளை தோல், விதை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

தக்காளிப்பழத்தை கிரைண்டரில் (மிக்ஸியில்) அடித்து வடிகட்டி பருப்பு தண்ணீருடன் கலக்குங்கள்.

அத்துடன் தண்ணீர் ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்குங்கள்.

அதன்பின்பு மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தூளாக்கி கொள்ளவும்.

நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி அதனுடன் பருப்பு தண்ணீர் கலவையை சேருங்கள் .

அக்கலவை பொங்கி வரும்போது தேசிக்காய் (எலுமிச்சை) சாறு சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: