அரைநெல்லி ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரை நெல்லிக்காய் - 10

தக்காளி - 1

பருப்புத் தண்ணீர் - 2 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

உப்பு - தேவையான அளவு.

ரசப் பொடிக்கு பொடிக்க:

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

மிளகு - 1/2 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி, பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவவும்.

குறிப்புகள்: